Tuesday, 5 November 2013

கனடாவில் தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்!


 கனடா நாட்டில் ஒரு தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய திரையுலகினை கடந்து உலகளவில் புகழ் பெற்று விளங்குபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
பல்வேறு விருதுகள், கெளரவங்கள் என எது கிடைத்தாலும், அதை பெரியளவில் எடுத்துக் கொள்வதில்லை ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது அவருக்கும் பெருமையளிக்கும் வகையில் கனடா நாட்டில் தெரு ஒன்றிற்கு அவரது பெயரை சூட்டியிருக்கிறார்கள்.
கனடாவின் டொரண்டாவின் மர்கம் நகரில் International Indian Film Festival Toronto (IIFFT) நடைபெற்று வருகிறது. இதில் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.
அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் சாதனைகளை முன்னிலைப்படுத்தி, ஒரு தெருவிற்கு ‘அல்லா ரக்கா ரஹ்மான்' என்று ஏ.ஆர்.ரஹ்மானின் முழுப்பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
அத்தெருவின் பெயர் பலகையுடன் ஏ.ஆர்.ரஹ்மான் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதனை அவரது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு, “வெல்கம் டூ மை ஸ்டிரீட்” என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment