இயக்குனர் களஞ்சியம் படத்தில் இருந்து பாதியில் வெளியேறிய நடிகை அஞ்சலியை, ஸ்டன்ட் மாஸ்டர் கடுமையாக தாக்கி பேசியதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுமுகம் ராஜேஷ், கவுரி நம்பியார் நடிக்கும் படம் வலியுடன் ஒரு காதல். சி.எம்.சஞ்சீவன் இயக்குகிறார். ஜே.கே.செல்வாஹ் இசை அமைக்கிறார். பி.ரவி ராஜேஷ் தயாரிக்கிறார். இதன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இதில் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பேசும் போது, இந்த விழாவுக்கு டைரக்டர் களஞ்சியம் வந்திருக்கிறார். அவர் இயக்கி வரும் படத்தில் நடித்து வந்த அஞ்சலி, பாதி ஷூட்டிங்கிலேயே நடிக்காமல் ஓடிவிட்டார். களஞ்சியத்தின் பிரச்னையை உடனடியாக நாங்கள் கையில் எடுக்கிறோம். அஞ்சலி எங்கே இருந்தாலும் தூக்குவோம். தூக்கி வந்து படத்தில் நடிக்க வைப்போம். நடிக்க முடியாது என்றால் இதுவரை ஆன செலவை வட்டியும் முதலுமாக செட்டில் பண்ணிவிட்டு ஓடிப் போய்விடு என்று சொல்வோம். இதுபோல படப்பிடிப்பில் இருந்து பாதியில் ஓடிப் போகும் நடிகைகளை... (கடுமையாக தாக்கி பேசினார்). தண்டித்தால்தான் வேறு எந்த நடிகைக்கும் தவறு செய்யும் எண்ணம் வராது என்றார். பாதியில் ஓடும் நடிகைகளை பற்றி ஜாகுவார் தங்கம் தாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்பேச்சு இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக பேசிய இயக்குனர் களஞ்சியம், ஊர் சுற்றிப் புராணம் என்ற பெயரில், நான் இயக்கும் சிறு பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பில் பாதியிலேயே ஓடிப் போய்விட்டார் அஞ்சலி. இன்று வரை எந்த தகவலும் தரவில்லை. எனக்கு பல லட்சம் நஷ்டமாகி கொண்டிருக்கிறது. திரைப்பட அமைப்புகள் முன்வந்து இப்பிரச்னையை தீர்க்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment