Monday, 4 November 2013

பிரகாஷ்ராஜ் எனக்கு ஜூனியர் சித்தார்த் கடுப்பு கமென்ட்


ரசிகரின் கேள்வியால் கோபம் அடைந்த சித்தார்த், பிரகாஷ்ராஜ் எனக்கு ஜூனியர் என்றார். பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். பிறகு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். தமிழில் நூற்றெண்பது. காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் எச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது ஜிகர்தண்டா, காவிய தலைவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த் தனது ரசிகர்களிடம் இணைய தளம் பக்கம் மூலம் கருத்துக்கள் பகிர்ந்துக்கொள்கிறார். தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். உங்களது அடுத்த தெலுங்கு படம் என்ன என்று ஒரு ரசிகர் கேட்டபோது,அடுத்து நான் நடித்துள்ள 5 படங்கள் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதில் தமிழ், தெலுங்கு இருமொழியில் நடித்த படமும், தமிழில் நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட படங்களும் அடங்கும் என்றார். பிரகாஷ்ராஜ் உங்களது கிளாஸ்மெட்டா என்றதற்கு அளித்த பதிலில்,பிரகாஷ்ராஜ் எனக்கு ஜூனியர். அமிதாப்பச்சன்தான் என்னுடைய கிளாஸ்மெட் என பதில் சொல்லியிருக்கிறார் சித்தார்த். ஹீரோவாக நடித்து வருவதால் பிரகாஷ் ராஜின் வயதோடு ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டது சித்தார்த்துக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம். அதனால்தான் அவர் இப்படி பதில் சொன்னாராம்.

No comments:

Post a Comment