ஆர்யா – விஜயசேதுபதி, ஆகியோர், புறம்போக்கு படத்துக்காக, கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்தின் தலைப்புக்கு பிரச்னை ஏற்பட்டு, பின், சுமுகமாக முடிந்தது. இந்த படத்தின் கதையை கேட்ட, ஆர்யா – விஜயசேதுபதி இருவருமே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் உள்ளனர். விஜயசேதுபதி கூறுகையில், இந்த புறம்போக்கு படத்தில் கமிட்டானதில் இருந்து, இந்த படத்தில் நீங்களா என்று, பலரும் என்னிடம் கேட்கின்றனர்.
ஆனால், கதையை, இப்போது சொல்ல முடியாது. மேலும், பொதுமக்களுக்கு நல்லது செய்யும் அனைவருமே புறம்போக்கு தான். இந்த படம் திரைக்கு வரும் போது, புறம்போக்கு என்ற வார்த்தைக்கு மக்கள் மத்தியில் தனி மரியாதை ஏற்படும் என்கிறார்.
No comments:
Post a Comment