கேடிபடத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா, தொடர்ந்து, வேங்கை படம் வரை ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாகவே சினிமாவில் வலம் வந்தார். அஜித்துடன் நடித்துள்ள, வீரம்படத்திலும், அதே உடல் கட்டை, மெயின்டன் செய்துள்ளார். ஆனால், புதிய பட வேட்டையில் அவர் ஈடுபட்ட போது, ஒரு மாறுதலுக்காக உடல் எடையை அதிகப்படுத்துங்கள் என, சில டைரக்டர்கள் கூறியுள்ளார்களாம். உடம்பை ஏற்றுவது ஒரு விஷயமே அல்ல. ஆனால், அதன்பின் குறைப்பது சாதாரண விஷயமில்லைஎன, சில சினிமா முன்னோடிகளிடம் கலந்து பேசினாராம் தமன்னா.
அப்போது, ஸ்லிம் நடிகைகளை விட, குண்டுஸ் நடிகைகளுக்கு தென் மாநில சினிமாவில் எப்போதுமே மவுசு உண்டு. அதனால், எடையை ஏற்றினால் பிளஸ் தானே ஒழிய, மைனஸ் இல்லை என்றார்களாம். அதையடுத்து, வெயிட் போடும் முயற்சியில் இறங்கியுள்ளார் தமன்னா.
No comments:
Post a Comment