நான் கடவுள் படத்தில் நடித்தபோது ஆர்யாவின் சாக்லேட்பாய் இமேஜ் மாறுவதற்கான சூழ்நிலை நிலவியது. ஆனால், அதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து அவர் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. அதனால் அந்த இமேஜ் அவரை பெபிக்கால் போன்று விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டது.ஆனால், சமீபகாலமாக என்ட்ரியாகும் சில இளவட்ட ஹீரோக்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே தங்களது இமேஜை மாற்றிக்கொள்ளும் முயற்சிகளில் இறங்குவதைப்பார்த்த ஆர்யாவுக்கும் இப்போது அந்த ஆர்வம் அதிகரித்து விட்டது. அதற்கான தருணத்தை பார்த்துக்கொண்டேயிருந்தவர், புறம்போக்கு, மீகாமன் படங்களில் கமிட்டானதில இருந்து இந்த படங்களுக்குப்பிறகு எனது சாக்லேட்பாய் இமேஜ் என்னைவிட்டு அடியோடு நீங்கி விடும் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறார்.
அதோடு, அடுத்தடுத்து காதல், காமெடி கதைகளுடன் தன்னை முற்றுகையிட்ட டைரக்டர்களிடமும், பொண்ணுங்களை துரத்தி துரத்தி காதலிக்கிறது, காமெடி என்ற பேருல ரசிகர்களை வலுக்கட்டாயமாக ரசிச்சு கிக்சு மூட்ட நினைக்கிறது இதையெல்லாம் சட்டையை கழற்றுவது மாதிரி கழற்றி வைத்து விட்டேன். அதனால், இனிமேல் அதிரடியான ஆக்ரோசமான கதைகளை ரெடி பண்ணிக்கொண்டு என்னிடம் வாருங்கள் என்று திருப்பி அனுப்புகிறாராம்.
அதோடு, சில ஆக்சன் ஹீரோக்களை முன்வைத்து, இனி அவர்கள் பட்டியலில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றும் உரக்க சொல்லி வருகிறாராம் ஆர்யா
No comments:
Post a Comment